பிரதமர் மோடியின் ஆந்திரப் பயணத்தின் போது ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கருப்பு பலூன்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் புறப்பட்டவுடன், கருப்பு பலூன்களை வீசியதற்காக 3 காங்கிரஸ் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்,
மேலும், விமான நிலையத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது என்று, கிருஷ்ணா மாவட்ட எஸ்பி சித்தார்த் கவுஷல் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“இந்த விவகாரம் தொடர்பாக மொத்தம் 4 காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கைது செய்யப்பட உள்ளனர்.
கைது செய்யப்பட்ட 4 காங்கிரஸ் தொண்டர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.பிரதமர் புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு (விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் வழியாக) பலூன்கள் வெளியிடப்பட்டன” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், கன்னவரம் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தபோது பாதுகாப்புக் குறைபாடு எதுவும் ஏற்படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.