பா.ரஞ்சித் – விக்ரம் பட அப்டேட்: 3D தொழில்நுட்பம்; வித்தியாசமான கெட்டப்; தயாராகும் பீரியட் ஃபிலிம்

விக்ரம் – பா.ரஞ்சித் இணையும் படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது என்றும், அது 18-ம் நூற்றாண்டை சார்ந்த கதை என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

`சார்பட்டா பரம்பரை’ படத்துக்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம், `நட்சத்திரம் நகர்கிறது’. காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அசோக் செல்வன் எனப் பலர் நடித்துள்ளர். ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இசையமைப்பாளர் டென்மா, அதன் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமாரும் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். கடந்த மே மாதமே இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தாலும் இன்னும் படத்தை பற்றி பா.ரஞ்சித் தரப்பில் இதுவரை அப்டேட் எதுவும் தராமல் இருந்தனர். இந்நிலையில் வருகிற 6ம் தேதி மாலையில் `நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் அப்டேட் வெளியாகிறது.

விக்ரம்

விக்ரம் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என விசாரித்தால்.. படத்தின் கதை ரெடியாகிவிட்டது. முழு ஸ்க்ரிப்டையும் கேட்டு விக்ரம் திருப்தியானதாகவும், `விரைவில் படப்பிடிப்புக்கு கிளம்பி விடலாம்’ என்று சொல்லியிருக்கிறார். 17ம்- 18ம் நூற்றாண்டின் கதைக்களம் என்பதால், அந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் இடங்களைத் தேடி பா.ரஞ்சித்தின் உதவியாளர்கள் லொகேஷன் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என பல இடங்களில் லொகேஷன்கள் தேடி வருகின்றனர். தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் யாரென ஓரளவு முடிவானாலும், நடிகர்கள் இன்னும் முடிவாகவில்லை. படம் பெரிய பட்ஜெட்டில் தயாராக உள்ளதால், நடிகர்களில் ஆச்சரியமான காம்பினேஷன்கள் இருக்கும் எனவும் தகவல். விக்ரம் இதில் வித்தியாசமான கெட்டபில் வரவிருக்கிறார் என்பதால், அதற்கான ஒர்க் அவுட்களையும் செய்து வருகிறாராம்.

விக்ரம் – பா.ரஞ்சித்

ரஞ்சித்தின் முதல் படமான `அட்டகத்தி’யை தனது ஸ்டூடியோ க்ரீன் நிறவனத்தின் மூலம் விநியோகம் செய்தவர் ஞானவேல் ராஜா. ‘மெட்ராஸ்’ படத்தை தயாரித்தார். இதனைத் தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் ஒரு படத்தை இயக்க வேண்டும் என தயாரிப்பாளர் தரப்பில் கேட்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் இப்போது மீண்டும் அவருடன் கைகோர்த்திருக்கிறார் ரஞ்சித்.

இதற்கிடையே ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு வருகிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.