நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரான நரேஷ் பாபு மற்றும் நடிகை பவித்ரா தாக்கப்பட்ட பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான வீட்ல விசேஷம், கவுரவம், அயோக்யா, கா.பெ.ரணசிங்கம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்துள்ளவர் பவித்ரா லோகேஷ்.
ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகை பவித்ரா லோகேஷ், விரைவில் மூன்றாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் பரவி வந்தது.
இவர் நடிகர் மகேஷ்பாபுவின் சகோதரரான நரேஷ் பாபுவை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக கூறப்பட்டது. நரேஷ் பாபு ஏற்கனவே 3 முறை திருமணமானவர்.
தற்போது மூன்றாவது மனைவியுடன் சண்டை வந்ததால் விவாகரத்துக்காக விண்ணப்பித்துள்ளார்.
Me Abandoning all the Works and Going into Theatres ❤️#Naresh #Pavithra pic.twitter.com/4XxissiJLZ
— 🫴𝐏𝐬𝐲𝐂𝐡𝐨𝐰🕊️ (@Wishnuvv) July 3, 2022
இந்த நிலையில் நரேஷும், பவித்ராவும், மைசூரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் தங்கியிருப்பதாக அறிந்த நரேஷின் 3வது மனைவி ரம்யா, அந்த இடத்துக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பொலிசார் அங்கு வந்து ரம்யாவை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். அதேபோல் ஒரே வீட்டில் தங்கி இருந்த நரேஷும், பவித்ராவும் வெளியே வந்தபோது செருப்பால் அடிக்க முயன்றார் ரம்யா.
இதையடுத்து பொலிசார் நரேஷை பத்திரமாக அழைத்து சென்றனர். செருப்பால் அடிக்க வந்த ரம்யாவை பார்த்து நடிகர் நரேஷ் விசில் அடித்தார்.
ரம்யா கூறுகையில், நரேஷ் ஒரு பெண்பித்தன்.
என்னுடன் வாழும் போதே அவருக்கு பவித்ராவுடன் தொடர்பு இருந்தது, இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.
இதை மறுத்த நரேஷ், ரம்யா தான் இந்த வதந்திகளுக்கு காரணம். நான் அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் தான் இப்படி பொய் செய்திகளை பரப்புகிறார் என கூறியுள்ளார்.