பிரித்தானியா முழுவதும் கொலை, பலாத்கார வழக்குகளில் சிக்கியுள்ள 22,000 பேர்கள் இன்னமும் பொலிசாரிடம் சிக்காமல் தண்ணிக்காட்டி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் பலாத்கார வழக்குகளில் சிக்கியவர்கள் எனவும், தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எனவும், கொலை வழக்கு குற்றவாளிகள் எனவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, பலர் நீதிமன்றத்தில் பதிவான முகவரிகளில் பல ஆண்டுகளாக வெளிப்படையாகவே குடியிருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், பொலிஸ் தரப்பு குறிப்பிட்ட குற்றவாளிகளை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவே தனியார் பத்திரிகை ஒன்று முன்னெடுத்த விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவிக்கையில், நமது நீதி அமைப்பு எவ்வளவு சீர்குலைந்துள்ளது என்பதை இந்த விவகாரம் அம்பலப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கைதாணை பிறப்பித்தும் 22,345 பேர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றே குறித்த தனியார் பத்திரிகை முன்னெடுத்த விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மட்டுமின்றி, சிலருக்கு 1980களில் கைதாணை பிறப்பித்துள்ளதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பொலிசாருக்கு தண்ணிக்காட்டியுள்ளவர்களில் சுமார் 2,000 பேர்கள் பலாத்காரம், வன்முறை, படுகொலை உள்ளிட்ட குற்றங்களில் தொடர்புடையவர்கள் என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், பலாத்கார குற்றவாளிகள் 400 பேர்கள் எனவும், குறைந்தது 11 பேர்கள் கொலை வழக்கில் சிக்கியவர்கள் எனவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஆனால், பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் தீவிரமாக நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவே காவலதுறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.