பேர்ஸ்டோவ்-க்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த கோலி… வறுத்தெடுக்கும் முன்னாள் வீரர்கள்!

ENG vs IND 5th Test: Jonny Bairstow – Virat Kohli Tamil News: இங்கிலாந்து சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட், 3 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒரு டெஸ்ட் போட்டியானது 2021-ம் ஆண்டு கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்டதாகும். அப்போது நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் 4 டெஸ்டுகளில் 2-ல் இந்தியாவும், ஒன்றில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. மற்றொரு போட்டி ‘டிரா’வில் முடிந்ததால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை உள்ளது.

கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய பயிற்சியாளர்கள் இடையே கொரோனா பரவியதால் கலக்கமடைந்த இந்திய வீரர்கள் இறுதி டெஸ்டில் விளையாட மறுத்தனர். இதனால் தள்ளிவைக்கப்பட்ட அந்த டெஸ்ட் போட்டி தான் தற்போது நடக்க உள்ளது. அதன்படி, இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் நடந்து வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி இந்தியா பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணி முதலில் இன்னிங்ஸ் முடிவில் 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சதம் விளாசிய ரிஷப் பண்ட் 146 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 104 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து 284 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் சதம் விளாசிய ஜானி பேர்ஸ்டோவ் 106 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது 2வது இன்னிங்ஸில் விளையாடிய வரும் இந்திய அணி, நேற்று நேற்று 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது. அரைசதம் அடித்த புஜாரா 50 ரன்களுடனும், பண்ட் 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

பேர்ஸ்டோவ்-க்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த கோலி…

நேற்று 3ம் நாள் ஆட்ட நேரத்தில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு கடுமையான தலைவலியை கொடுத்தார். ஒரு கட்டத்தில் அவரை விக்கெட்டை வீழ்த்த இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். எனினும், தொடர் வேகப்பந்துவீச்சு தாக்குதலுக்கு தாக்குபிடிக்காத பேர்ஸ்டோவ் முகமது ஷமி வீசிய 54.1 ஓவரில் கோலி வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேட்ச் பிடித்த கோலி பேர்ஸ்டோவ்-க்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்தார்.

முன்னதாக, 2ம் நாள் ஆட்டநேரத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பந்தை விரட்ட பேர்ஸ்டோவ் தடுமாறினார். அவர் இப்படி போராடுவதை பார்த்த முன்னாள் கேப்டன் விராட் கோலி டிம் சவுத்தியின் பெயரைப் பயன்படுத்தி அவரை வம்பிழுத்தர் (ஸ்லெட்ஜ்). 14வது ஓவரின் முடிவில் கோலி “சௌத்தியின் பந்தை விட கொஞ்சம் வேகமா?” என்று கூறினார். அது அங்கிருந்த ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியது.

விராட் கோலி, ஜானி பேர்ஸ்டோவுடனான வாய்மொழி சண்டை முதல் பேர்ஸ்டோவின் கேட்ச்சை எடுத்த பிறகு ஃபிளையிங் கிஸ் கொடுப்பது வரையிலான அவரது கள நடத்தையால் சில முன்னாள் வீரர்களை கோபப்படுத்தியுள்ளது.

கோலி குறித்து பதிவிட்டுள்ள ஆங்கில ஊடகவியாளர் பியர்ஸ் மோர்கன், “கடந்த 2.5 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் சதம் கூட அடிக்காத கோலி, கடந்த மாதத்தில் மூன்று டெஸ்ட் சதங்களை அடித்தவருக்கு கேலி முத்தம் கொடுக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார். ஸ்கை நியூஸில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வரும் மோர்கன் டெய்லி மெயில் செய்தித்தாளில் ஸ்போர்ட்ஸ் குறித்து எழுதி வருகிறார்.

முன்னாள் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் நிக் காம்ப்டன், “கோலி ஆட்டத்தை கடினமாக்குவது போல் தெரிகிறது, அவருடைய ஆஃப் ஸ்டம்ப் பற்றி உறுதியாக தெரியவில்லை, மேலும் அவரது இயல்பான தீவிரம் கூட கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. ஒரு நபர் மீண்டும் தனது இடத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.

கோலி மிகவும் மோசமான வாய்மொழி நபர் அல்லவா. 2012 ஆம் ஆண்டில் நான் பெற்ற துஷ்பிரயோகத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன், அந்த சம்பவம் என்னைத் திகைக்க வைத்தது, அவர் தனக்குத்தானே ஒரு கடுமையான அவதூறு செய்தார், ”என்று அவர் ட்வீட் செய்திருந்தார். கடந்த ஆண்டு, லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, ​​கோலியின் நடத்தைக்காக காம்ப்டன் அவரை வசைபாடியிருந்தார்.

நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் கோஹ்லியை நேரடியாக விமர்சிக்கவில்லை, ஆனால் பேர்ஸ்டோவுடன் வாய்மொழி சண்டையில் ஈடுபடுவதற்கான அவரது முடிவை கேள்வி எழுப்பினார்.

“எதிர் அணிகள் ஏன் ஜானி பேர்ஸ்டோவை கோபப்படுத்துகிறார்கள், அவர் 10 மடங்கு சிறப்பாக இருக்கிறார். தினமும் காலையில் அவருக்கு ஒரு கிஃப்ட் பேஸ்கெட்டைக் கொடுங்கள், அவர் பேட்டிங் செய்யும் போது அவருடைய காரை நீங்கள் மதிப்பிட்டுள்ளீர்கள் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள். அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க எதையும் செய்ய வேண்டும், ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்

“கோலி ஏன் அப்படி நடந்து கொண்டார் என்று தெரியவில்லை. அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர், ஆனால் அவர், பேர்ஸ்டோவுக்கு முத்தங்களை ஊதுகிறார்… சீரியஸா?” என்று முன்னாள் புரோ கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஃபேபியன் கௌட்ரே ட்வீட் செய்துள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.