America event honours Indian defence veterans, Sydney heavy flood today world news: உலக நாடுகளில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.
முன்னாள் இந்திய ராணுவ வீரர்களுக்கு அமெரிக்காவில் கெளரவம்
இந்திய ஆயுதப் படை வீரர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை அமெரிக்காவில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் நிகழ்வான ‘வரிஷ்ட யோத்தா’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
பல்வேறு போர்களில் ஈடுபட்ட சில புகழ்பெற்ற வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உட்பட 140 க்கும் மேற்பட்டோர் இங்கு நடந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
“நண்பர்களே, நீங்கள் இந்தியாவுக்காக, மிகுந்த கடமை உணர்வுடன், தன்னலமற்ற சேவை செய்து, தியாகம் செய்துள்ளீர்கள். 4 மில்லியன் இந்திய சமூகத்தின் ஒரு பகுதியாக நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் பல்வேறு துறைகளில் இந்தியா-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறீர்கள்” என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து கூறினார்.
சீனாவைத் தாக்கும் சபா புயல்
“சபா புயல் வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது, ஆனால் அது வடக்கு நோக்கி நகர்வதால் அடுத்த சில நாட்களில் சீனாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று சீன வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சீனா மத்திய வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் சபாவில் புயல் நீல எச்சரிக்கையை நீக்கியது, ஆனால் வார இறுதியில் சீனாவின் இந்த ஆண்டின் முதல் புயல் பல வாரங்கள் பெய்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழையால் நீரில் மூழ்கிய பல தெற்கு மாகாணங்களுக்கு பலத்த மழை மற்றும் காற்றைக் கொண்டு வந்தது.
திங்கட்கிழமை காலை நிலவரப்படி, சபாவின் மையம் குவாங்சியின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது வடகிழக்கு திசையில் மணிக்கு 10 முதல் 15 கிமீ (மணிக்கு 6 முதல் 9 மைல்) வேகத்தில் ஹுனான் மற்றும் ஹூபே மாகாணங்களை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை, வெள்ளத்தால் மிதக்கும் சிட்னி
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியின் பல புறநகர்ப் பகுதிகள் இடைவிடாத மழை வெள்ளத்தில் மூழ்கியதை அடுத்து, திங்களன்று ஆயிரக்கணக்கான சிட்னி குடியிருப்பாளர்களுக்கு புதிய வெளியேற்ற உத்தரவுகளை அதிகாரிகள் பிறப்பித்தனர்.
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் ஒரு தீவிர குறைந்த அழுத்த அமைப்பு நியூ சவுத் வேல்ஸின் தெற்குப் பகுதிகளில் திங்கள்கிழமை அதிக கனமழையைக் கொண்டுவரும் என்று கணிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சிட்னியின் பல இடங்கள் வார இறுதியில் ஒரு மாத மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
அடுத்த 24 மணி நேரத்தில் நியூ சவுத் வேல்ஸில் நியூகேஸில் முதல் சிட்னியின் தெற்கே 300 கிமீ (186 மைல்கள்) தொலைவில் உள்ள பரந்த பகுதிகளில் சுமார் 100 மில்லிமீட்டர்கள் (4 அங்குலம்) மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
முதலையை மணந்த மேயர்
மழை மற்றும் இயற்கை வளங்கள் வேண்டி, மெக்ஸிகன் மேயர், முதலையை திருமணம் செய்துக் கொண்டார்.
மெக்ஸிகனில் ஹிஸ்பானிக் என்ற முதலையைத் திருமணம் செய்து கொள்ளும் சடங்கு நடைமுறையில் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்ட இந்த சடங்கை செய்தால் நாட்டில் மழை வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
மெக்ஸிகனின் ஓவாசகா மாநிலத்தில் உள்ள சிறிய நகரம் சான் பெட்ரோ ஹியூமலுலோ. இதன் மேயராக இருப்பவர் விக்டர் ஹ்யூகோ சோசா. கடந்த வியாழக்கிழமை இவர் 7 வயதான பெண் முதலையை திருமணம் செய்து கொண்டார்.