ரூபாய் 5 கோடிக்கு மேல் டர்ன் ஓவர்செய்யும் நிறுவனங்கள் ஜிஎஸ்டியின் இ-இன்வாய்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஆண்டுக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் விற்றுமுதல் கொண்டவர்களுக்கு மட்டுமே இ-இன்வாய்ஸ் கட்டாயம் என்ற நிலை உள்ளது.
தங்கம் விலை அடுத்த வாரம் எப்படியிருக்கும்.. கவனிக்க வேண்டிய 5 முக்கிய காரணிகள்?
ஆனால் இனிமேல் ரூபாய் 5 கோடிக்கு மேல் விற்று முதல் செய்யும் வணிகர்களுக்கு இ-இன்வாய்ஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதால் தொழில் நிறுவனங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இ-இன்வாய்ஸ்
மின்விலை பட்டியல் என்று கூறப்படும் இ-இன்வாய்ஸ் என்பது கணினி இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட விலைப்பட்டியலின் வடிவமைப்பு ஆகும். இது ஜிஎஸ்டி போர்ட்டலில் அங்கீகரிக்கப்படும் ஒரு அமைப்பாகும்.
விலைப்பட்டியல்
இன்வாய்ஸ் முறையின் கீழ், GSTN ஆல் நிர்வகிக்கப்படும் விலைப்பட்டியல் பதிவு போர்டல் (IRP) மூலம் ஒவ்வொரு விலைப்பட்டியலுக்கு எதிராகவும் அடையாள எண் வழங்கப்படும். இன்வாய்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள வணிகங்கள் இதனை செய்யாவிட்டால், அவற்றின் விலைப்பட்டியல் செல்லாது என்றும், அபராதம் விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ரூ.500 கோடியில் இருந்து ரூ.5 கோடி
இதுகுறித்து வருவாய் துறை செயலாளர் பஜாஜ் அவர்கள் கூறுகையில் ஆண்டுக்கு ரூபாய் 500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுபவர்களுக்கு மட்டுமே இ-இன்வாய்ஸ் முதலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் அந்தத் தொகை 100 கோடி, 20 கோடி என குறைந்து தற்போது இந்த தொகை 5 கோடியாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
5 கோடி டர்ன் ஓவர்
அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் 5 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்யும் நிறுவனங்கள் இன்வாய்ஸ் முறையை பின்பற்ற வேண்டும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பஜாஜ் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
விவேக் ஜோஹ்ரி
ஜூலை 1ஆம் தேதி நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தின் போது வரி செலுத்துவோர் இந்த பிரச்சனையை முன்னிறுத்தியதாகவும், இதற்கு பதிலளித்த மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) தலைவர் விவேக் ஜோஹ்ரி அவர்கள் கூறியபோது, ‘ரூ.5 கோடி டர்ன் ஓவர் செய்யும் வணிகர்கள் இ-இன்வாய்ஸ் முறையை பயன்படுத்த வேண்டும் என்பது ஏற்கனவே எடுக்கப்பட்ட ஒரு முடிவு என்று தெரிவித்தார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி நடந்த 37வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டியில் இ-இன்வாய்ஸ்’ அறிமுகப்படுத்த பரிந்துரைத்தது என்றும், சிறு வரி செலுத்துவோருக்கு அடிப்படை கணக்கியல் மற்றும் பில்லிங் அமைப்புகளை இலவசமாக வழங்கும் பல்வேறு கணக்கியல் மற்றும் பில்லிங் மென்பொருள் தயாரிப்புகளை ஜிஎஸ்டிஎன் இணைத்துள்ளதால், கட்டாய நிபந்தனைகள் வணிகங்களுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்தாது என்பதை அரசாங்கம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது என்றும் கூறப்பட்டது.
பெரும் சுமையா?
வணிக நிறுவனங்கள் பல்வேறு பில்லிங் மென்பொருளைப் பயன்படுத்தி வரும் நிலையில் ஒவ்வொரு மென்பொருளும் இ-இன்வாய்ஸ் உருவாக்கி சேவ் செய்து விடும் என்றும், இதனால் வணிகர்களுக்கு பெரும் சுமை இருக்காது என்றும் வரி அதிகாரிகள் கூறுகின்றனர்.
பில்லிங் மென்பொருள்
300க்கும் மேற்பட்ட பில்லிங் மென்பொருள் ‘இ-இன்வாய்சிங்’ தயாரிக்கும் முறையை கொண்டுள்ளது என்றும், எனவே இ-இன்வாய்ஸ் தரநிலை அவசியம் என்றும், ஒரு மென்பொருளால் உருவாக்கப்பட்ட இ-இன்வாய்ஸ் வேறு எந்த மென்பொருளாலும் படிக்க முடியும் என்பதால் பணிகள் எளிதாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
E-invoice mandated for companies with Rs 5 crore turnover
E-invoice mandated for companies with Rs 5 crore turnover | ரூ.5 கோடிக்கும் மேல் டர்ன் ஓவரா? இனிமேல் இது கட்டாயம்!