கிருஷ்ணகிரி, ஒசூர், ஒரக்கடம் உள்ளிட்ட இடங்களில் ரூ.1497 கோடி முதலீட்டில் 12 நிறுவனங்களின் வணிக உற்பத்தியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம், 7050 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 1497 கோடி ரூபாய் முதலீட்டில் 12 நிறுவனங்களின் முதலீட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் தொழிற்பூங்கா, உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், ஜவுளி உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்.
மேலும், ஒசூர், ஒரகடத்தில் மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தையும் இருக்காட்டுக்கோட்டையில் எஃகு பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல்லில் ஜவுளி உற்பத்தி நிறுவனம், கோவையில் 2 தகவல் தொழில்நுட்பப் பூங்கா, ஈரோட்டில் பேக்கேஜிங் நிறுவனம், காஞ்சிபுரத்தில் மின் இணைப்பு பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கான வயரிங் நிறுவனம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி, ஒசூர், ஒரக்கடம், இருங்காட்டுக்கோட்டை, திண்டுக்கல், கோவை, ஈரோடு ஆகிய இடங்களில் ரூ.1497 கோடி முதலீட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 12 நிறுவனங்களின் மூலம் 7050 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“