எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக, திருகோணமலையில் உள்ள ஐஓசி வளாகத்தில் இருந்து நேற்று (03) ஒரு மில்லியன் லீற்றர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்
அத்துடன், நேற்றைய தினம் விடுமுறை நாளாக இருந்தாலும், எரிபொருளை விநியோகிப்பதற்காக முடிந்த அளவு நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.