வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா:பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் எலும்பு முறிவால், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், 74, பீஹார் தலைநகர் பாட்னாவில் வசிக்கிறார். கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் ஜாமின் பெற்றுள்ள லாலு, சிறுநீரகக் கோளாறு உட்பட பல்வேறு பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகிறார். இதையடுத்து, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் அனுமதி பெற்றிருந்தார்.
சிங்கப்பூர் செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், லாலு வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லப்பட்டார்.அங்கு, தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்த டாக்டர்கள், லாலுவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஏற்கனவே, லாலுவுக்கு வேறு சில உடல்நல கோளாறுகள் இருப்பதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Advertisement