எகிப்தின் ஹூர்ஹடா மாகாணத்தில் உள்ள செங்கடலில் குளித்து கொண்டிருந்த 2 பெண்கள் சுறா தாக்கி உயிரிழந்தனர்.
ஷஹல் ஹஹ்ரீஸ் எனும் இடத்தில் விடுமுறை நாளான நேற்று நூற்றுக்கணக்கானோர் குளித்து கொண்டிருந்தனர்.
600 மீட்டர் தொலைவில் நீச்சல் அடித்து குளித்துக்கொண்டிந்தபோது, சுறா தாக்கியதில் ஆஸ்திரேலியா மற்றும் ருமேனியா நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.