ரயில்வே பாதுகாப்பு படை விழிப்புணர்வு பேரணி, தமிழில் இல்லாமல் இந்தியில் இடம் பெற்றதற்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
75ஆவது ஆண்டின் சுதந்திர பெருவிழாவை கொண்டாடும் விதமாக, சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் இருசக்கர வாகன பேரணி மற்றும் விழிப்புணர்வு காணொளி அடங்கிய வாகனம் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் விழிப்புணர்வு காணொளியில் வாசகங்கள் தமிழில் இடம்பெறாமல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இடம் பெற்றிருந்ததால் சர்ச்சை எழுந்தது.
இது குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பி.ஜி. மால்யாவிடம் கேட்டபோது, தமிழில் பேனர்கள் மற்றும் விழிப்புணர்வு காணொளி இல்லாதது தங்கள் பக்கமுள்ள தவறுதான் எனவும், அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் கூறினார். வருங்காலங்களில் இது தொடராமல் இருக்க அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM