கோவையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கோவையில் 17 வயது சிறுமி தனது தங்கையுடன் பாட்டி வீட்டில் வசித்து வரும் நிலையில், இரண்டு சிறுமிகளையும் வீட்டில் விட்டு விட்டு சிறுமிகளின் பாட்டி கடைக்கு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்டு அறிந்த மதபோதகர் ஸ்டீபன் ராஜ், கதவை திறந்து உள்ளே சென்று சிறுமியின் தங்கையை ஒரு அறையில் வைத்து அடைத்துவிட்டு, 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது சிறுமி கூச்சலிட்டதால் ஸ்டீபன் ராஜ் தப்பி சென்ற நிலையில், இதுகுறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ஸ்டீபன் ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.