அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழுவில் இடம் பெற்றுள்ள 10க்கும் மேற்பட்டோர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட முடிவுகள் நீதிமன்றம் கட்டுப்படுத்துவது முறையல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பொது குழுவில் கட்சி உறுப்பினர்களின்விருப்பப்படி ஜனநாயகம் முறைப்படி எடுக்கும் முடிவுகள் நீதிமன்றம் கட்டுப்படுத்தக்கூடாது என உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க கோரி இன்று முறையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வருகின்ற 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தால், மீண்டும் பொதுக்குழுவில் புதிய தீர்மானங்களை கொண்டு வர இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.