ஸ்டாலின் சொன்ன முக்கிய விஷயங்கள்.. சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடந்தது என்ன?

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படுள்ளன.

முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு: Investment Conclave-ல் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை

தமிழக அரசு தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாகவே முதலீட்டாளர்களை கவரும் விதமாக சீர்திருத்தங்களை சரியாக செயல்படுத்திய மாநிலங்களில் தமிழ் நாட்டும் ஒன்றாக உள்ளது.

நடப்பு ஆண்டில் இதுவரையில் இதோடு சேர்த்து 6 மாநாடுகள் நடந்துள்ளது. ஓரு ஆண்டிற்குள் இத்தனை மாநாடுகள் நடந்துள்ளதே சாதனை தான் என்று கூறியுள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.

என்ன இப்பாடியாகிபோச்சு.. இதுவும் நல்லதுக்கு தான்.. தங்கம் விலையால் குழப்பத்தில் முதலீட்டாளர்கள்!

மொத்தம் 6  முதலீட்டு மாநாடு

மொத்தம் 6 முதலீட்டு மாநாடு

சென்னையில் 2 மாநாடும், கோவையில் 1 மாநாடும், தூத்துக்குடியில் 1 மாநாடும், துபாயில் 1 மாநாடும் நடந்துள்ளது. தற்போது ஆறாவதாக இந்த முதலீட்டாளர் மாநாடு நடந்துள்ளது. இது உலக முதலீட்டாளர்கள் தமிழ் நாட்டினை நோக்கி வரத் தொடங்கியுள்ளதன் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.

இலக்கு என்ன?

இலக்கு என்ன?

தமிழ் நாட்டினை 1 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்றணும். இரண்டாவதாக தெற்காசியாவிலேயே முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஒரு சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும். மூன்றாவதாக உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் மேட் இன் தமிழ்நாடு சென்றடைய வேண்டும். நான்காவதாக மாநிலம் முழுவதும் முதலீடுகள் பரவலாகவும் சீராகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேற்கொள்ளும். இதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சியினை ஊக்குவிக்கும்.

அனைத்து உதவிகளும் செய்யப்படும்
 

அனைத்து உதவிகளும் செய்யப்படும்

தமிழகத்தின் மீது நம்பிக்கை கொண்டு முதலீடு செய்ய வந்துள்ள நிறுவனங்களை வரவேற்ற முக ஸ்டாலின், நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகள், அனுமதிகளை பெறுவதற்கு, தமிழ் நாடு உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

நிதி நுட்ப பிரிவு

நிதி நுட்ப பிரிவு

குறிப்பாக நிதி நுட்ப துறையில் பல ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. மின்னணு மயமாக்கப்பட்ட நிதி சேவைகள் அனைத்தும் ஏழை, எளிய மக்களை சென்றடைய வேண்டும். ஆன்லைன் விற்பனையானது பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆன்லைன் நிதி சேவையும் வளர்ச்சி கண்டுள்ளது. தொழில் துறை வழிகாட்டி பிரிவில் நிதி நுட்ப பிரிவு தனியாக உருவாக்கப்பட்டுள்ளது.

நான் முதல்வன்

நான் முதல்வன்

இதற்காக தனியாக TN tech experience என்ற தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு நான் முதல்வன் திட்டத்தினை பற்றி நினைவுகூர்ந்த முதல்வர், இதற்காக இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மாணவர்கள், இளைஞர்களின் வளர்ச்சியினை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என கூறியுள்ளார். இதன் மூலம் தொழில் மற்றும் கல்வி துறையோடு சேர்ந்து செயல்படும் என கூறியுள்ளார்.

புதிய வரையறைகள்

புதிய வரையறைகள்

11 நிதி நுட்ப திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்துள்ளதாகவும், நிதி நுட்ப கொள்கையின் கீழ் ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குவதற்கானஆணைகள் இன்று 2 நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது எனவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழ் நாடு உயிர் அறிவியல் கொள்கை 2022, தமிழ் நாடு ஆராய்ச்சி மேம்பாட்டு கொள்கை 2022 வெளிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் நாட்டிற்கு முதலீட்டினை அதிகரிக்க முடியும். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப நம் வளர்ச்சி பாதையை மாற்றிக் கொண்டால், அது நமது போட்டித் தன்மையை அதிகரிக்கும். இது நம்மை உலகளவில் எடுத்து செல்லும்.

 முதலீட்டு இலக்கு

முதலீட்டு இலக்கு

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரையில் 192 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 2.20 லட்சம் கோடி ரூபாயாகும். கடந்த ஆண்டு ஈர்த்த முதலீடுகளை விட இந்த ஆண்டு அதிகம் ஈர்க்கணும் என் இலக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று போடப்பட்ட ஒப்பந்தங்களுடன் சேர்த்து 2.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.

பள்ளி கல்வி படித்தவர்கள்

பள்ளி கல்வி படித்தவர்கள்

பல துறைகளில் முதலீடுகளை ஈர்த்து, பல துறைகளிலும் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதில் இந்த அரசு கவனம் செலுத்துகிறது. குறிப்பாக பள்ளிக் கல்வி முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக, காலணி உற்பத்தி, ஆயத்த உடைகள் உற்பத்தி உள்ளிட்டவற்றை செயல்படுத்த ஊரக பகுதிகளில் ஊக்குவித்து வருகின்றது.

 உயர்கல்வி படித்தவர்களுக்கு

உயர்கல்வி படித்தவர்களுக்கு

இதேபோல உயர்கல்வி படித்தவர்களுக்கும் நிதி நுட்பம், உலகளாவிய மையம், மின் வாகனம், லித்தியம் அயர்ன் பேக்டரி, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளில் சிறிய முயற்சி எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காக தூத்துக்குடியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையத்தினை உருவாக்கவும், தமிழக்கத்தில் செமி கண்டக்டர் உற்பத்திக்காக சிங்கப்பூர் நிறுவனத்துடம் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Important things that MK Stalin said at the tamilnadu investment conclave 2022?

Important things that MK Stalin said at the tamilnadu investment conclave 2022?/ஸ்டாலின் சொன்ன முக்கிய விஷயங்கள்.. சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடந்தது என்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.