Realme GT Neo 3 Thor: 150W சார்ஜர்… 15 நிமிஷத்துல பேட்டரி ஃபுல் – ரியல்மியின் புதிய ஸ்பெஷல் எடிஷன் போன்!

Realme GT Neo 3 Thor love and thunder limited edition: ரியல்மி நிறுவனம் தனது புதிய Realme GT Neo 3 5ஜி ஸ்பெஷன் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஜூலை 7ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. 150W பவர்ஃபுல் சார்ஜிங் என இந்த ஸ்மார்ட்போன் பிளாக்‌ஷிப் அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் Flipkart ஷாப்பிங் தளத்தில் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. பகல் 12 மணிக்கு இது அறிமுகம் செய்யப்படும். ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் என்பதால், குறைந்தளவு போன்களே விற்பனைக்குக் கொண்டுவரப்படும். எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி ஜிடி நியோ 3 லிமிடெட் எடிஷன் சிறப்பம்சங்கள் (Realme GT Neo 3 Thor Limited Edition Specifications)

புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 6.7″ அங்குல முழுஅளவு எச்டி+ அமோலெட் திரையைக் கொண்டிருக்கிறது. டிஸ்ப்ளே 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்டு செயல்படும். பஞ்ச் ஹோல் திரை அம்சத்தினை புதிய ரியல்மி போன் கொண்டிருக்கும். டிஸ்ப்ளே திறனை மேம்படுத்த புதிய டெடிக்கேட்ட சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டச் சேம்ப்ளிங் ரேட் 1000Hz ஆக இருக்கும்.

மீடியாடெக் டைமென்சிட்டி 8100 புராசஸர் இந்த போனில் நிறுவப்பட்டுள்ளது. மெமரியைப் பொருத்தவரை, LPDDR5 12GB ரேம், UFS 3.1 256GB ஸ்டோரேஜ் மெமரி வரை இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதள அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ரியல்மி UI 3.0 ஸ்கின் இந்த ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனை இயக்குகிறது.

Moto G42: AMOLED டிஸ்ப்ளே, 50MP கேமரா – பட்ஜெட் மோட்டோ போனோட விலைய கேட்டா வாயடச்சு போய்டுவீங்க!

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்பெஷல் எடிஷன் போன் கேமராவைப் பொருத்தவரை 50MP மெகாபிக்சல் Sony IMX766 சென்சார் OIS வசதியுடன் முதன்மை கேமராவாக வருகிறது. இதனுடன் 8MP மெகாபிக்சல் அல்ட்ரா வைட், 2MP மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் என பின்பக்கம் மூன்று கேமராக்கள் கொண்ட அமைப்பு உள்ளது.

டிஸ்ப்ளே பஞ்ச் ஹோலில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16MP மெகாபிக்சல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. Realme GT Neo 3 thor limited edition ஸ்மார்ட்போனில் ப்ளூடூத் 5.2, வைஃபை 6E, ஜிபிஎஸ், NFC, டைப்-சி, இரட்டை 5ஜி போன்ற இணைப்பு ஆதரவும் உள்ளது.இதில் கொடுக்கப்பட்டிருக்கும் VC liquid cooling பிரத்யேக அம்சமாக இருக்கிறது.

ரியல்மி ஜிடி நியோ 3 லிமிடெட் எடிஷன் பேட்டரி (Realme GT Neo 3 Battery)

இந்த ஸ்மார்ட்போனில் அதிவிரைவான அல்ட்ரா டார்ட் சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 150W அல்ட்ரா டார்ட் சார்ஜிங் ஆதரவு நிறுவப்பட்டுள்ளது. இது வெறும் 17 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை முழுவதுமாக சார்ஜ் செய்துவிடும் .

ஸ்மார்ட்போனின் 12GB+256GB வேரியண்ட் விலை ரூ.42,999 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ.7000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடியை கழித்தால், ஸ்மார்ட்போனை பயனர்கள் ரூ.35,999 என்ற விலைக்கு வாங்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.