Russia – Ukraine Crisis: உக்ரைன் அணு ஆயுதத்தை உருவாக்குவதே தீர்வா

லண்டன்: உக்ரைன், அணு ஆயுதங்களை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. உலகின் மிக அழிவுகரமான ஆயுதத்தை உருவாக்கி பாதுகாப்பை பலப்படுத்தினால்தான், ரஷ்யாவின் படையெடுப்பு எதிர்காலத்திலும் தொடராது என்று உக்ரைன் கருதுகிறது.

லாஃப்பரோவில் உள்ள சர்வதேச வரலாறு மற்றும் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் டாக்டர் பால் மாட்ரெல், இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அணு ஆயுதக் களஞ்சியத்தை நிறுவுவது ரஷ்யாவின் தாக்குதலைத் தடுக்க ஒரு நல்ல வழி என்று உக்ரைன் நம்புவதாக அவர் கூறுகிறார். 

ரஷ்ய அதிபர் புடினின் போர் ஆர்வத்தை தடுக்கும் வகையில், உக்ரைன் தனது சொந்த அணு ஆயுதங்களை உருவாக்க முடியும். சரியான அளவிலான ஆயுத பலமே, போரை நிறுத்தும்படி புடினை கட்டாயப்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | உக்ரைன் வணிக வளாகத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்; 18 பேர் பலி

லாஃப்பரோவில் உள்ள சர்வதேச வரலாறு மற்றும் சர்வதேச உறவுகள் விரிவுரையாளரான டாக்டர் பால் மாட்ரெல், விளாடிமிர் புடினின் நடவடிக்கைகள் உக்ரைனை தனிமைப்படுத்தவும், அந்நாட்டு இராணுவத்தை பலவீனப்படுத்தவும் மற்றும் நேட்டோ விரிவாக்கத்தை மாற்றவும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று நம்புகிறார்.

உக்ரேனிய அணு ஆயுதக் களஞ்சியத்தை நிறுவுவது புடினை அந்த இலக்குகளைத் தொடர்வதைத் தடுக்க சிறந்த வழியாகும் என்றும் அவர் உறுதியாக நம்புகிறார்.

நிபுணர் டாக்டர் பால் மாட்ரெலின் கூற்றுப்படி, ரஷ்ய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் தனது சொந்த அணு ஆயுதங்களை உருவாக்கத் தொடங்க வேண்டும். அதே நேரத்தில், வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, தனது நாட்டிற்காக ஆயுதக் களஞ்சியத்தை உருவாக்க வேண்டும் அல்லது தற்போதைக்குக் உடனடியாக பிற நாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

உக்ரைனில் இதற்கு முன்பு அணுகுண்டுகள் இருந்தன
“நான் உக்ரைனின் அதிபராக இருந்தால், அணு ஆயுதங்களை உருவாக்குவது பற்றி நான் கடுமையாக பரிசீலிப்பேன். சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்தபோது, 1990களில் உக்ரைனில் அணு ஆயுதங்கள் இருந்தன” என்று டாக்டர் மாட்ரெல் கூறினார்.

மேலும் படிக்க | உக்ரைன் மீது KH-22 என்னும் பிரம்மாஸ்திரத்தை ரஷ்யா ஏவக் கூடும்: எச்சரிக்கும் பிரிட்டன்

“ஐரோப்பாவை அணுவாயுதமாக்குவதற்கும் அதை பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கும் உக்ரைன் ஒப்புக்கொண்டது. சரி, அதேபோல, உக்ரைன் அணு ஆயுதங்களை வைத்திருந்தால், புடின் தாக்கியிருக்க மாட்டார், ஏனென்றால் தனது நாட்டின் மீது உக்ரைன் அணுசக்தி தாக்குதலை மேற்கொள்ளலாம் என்று யோசித்திருப்பார்” என்று டாக்டர் மாட்ரெல் தெரிவித்தார்.

நான்கு மாதங்களாக தொடரும் போர் 
ரஷ்யாவுடனான மோதல் தொடங்கி நான்கு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா இடைவிடாமல் குண்டுவீசி வருவதால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வீரர்கள் உயிரிழந்தனர். 

7 மில்லியன் மக்கள் இப்போது உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாக நம்பப்படுகிறது. இதோடு, பிப்ரவரியில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்ருள்ளனர்.

2,23,000 குழந்தைகள் உட்பட 1.3 மில்லியன் மக்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக ரஷ்யாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்றும்  உக்ரைன் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

மேலும் படிக்க | போரில் திருப்புமுனை; லிசிசான்ஸ்கில் இருந்து பின்வாங்கும் உக்ரைன் துருப்புக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.