இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த காரணத்திற்காக அனைத்து முன்னணி டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் துவங்கியது.
இதனால் சொந்த ஊரில் இருந்த பலர் தாங்கள் பணியாற்றும் பெரு நகரங்களுக்கு வர துவங்கினர், ஆனாலும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஹைப்ரிட் மாடல் என்ற கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியதால் ஊழியர்கள் வாரத்தில் பாதி நாள் வீட்டில் இருந்து பணியாற்றும் நிலை தான் இன்று வரையில் தொடர்கிறது.
ஆனால் தற்போது ஊழியர்கள் வருவதற்கு அடம் பிடிக்கத் துவங்கியுள்ளனர். இதற்கு முதலும் முக்கியக் காரணம் என்ன தெரியுமா..?
Work From Home நிரந்தரமாக்கப்படுமா? நாஸ்காம் அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா தொற்றால்
மத்திய சுகாதாரத்துறை 3ஆம் தேதி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல் படி இந்தியாவில் ஒரே நாளில் 16,103 பேருக்குக் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 31 பேர் தொற்று பாதிப்பால் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளது.
இந்தியா எண்ணிக்கை
இதன் மூலம் நாட்டின் கொரோனா தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை 4,35,02,429 ஆகவும், மரணங்களின் எண்ணிக்கை 5,25,199 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் தற்போது 1.1 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வொர்க் ப்ரம் ஹோம்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நிறுவனங்கள் ஊழியர்கள் அலுவலகத்திற்கு அழைக்கும் திட்டத்தில் முக்கியமான மற்றும் உறுதியான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. குறிப்பாக ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வர வேண்டும் என உத்தரவிட்டு உள்ள நிறுவனங்களின் முடிவு ஊழியர்களுக்கு முக்கியமானதாக விளங்குகிறது.
Synopsys நிறுவனம்
இந்நிலையில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவில் நொய்டாவில் அலுவலகம் வைத்திருக்கும் Synopsys வொர்க் ப்ரம் ஹோம் துவங்குவதற்கு முன்பு அனைத்து ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்துள்ளது.
பேடிஎம்
இதேபோல் நாட்டின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் மற்றும் டிஜிட்டல் நிதியியல் சேவைகளை அளிக்கும் பேடிஎம் தனது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்துள்ளது. பேடிஎம் ப்ராடெக்ட், டெக், பிஸ்னஸ் என அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்துள்ளது.
டிசிஎஸ், இன்போசிஸ்
இதற்கிடையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை மற்றும் ஐடி சேவை ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ், இன்போசிஸ் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு அதன் ஊழியர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. இரு நிறுவனங்களும் ஹைப்ரிட் மாடல் திட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது, இதனால் அதில் எந்த மாற்றமும் இல்லை.
5 – 10% ஊழியர்கள் மட்டுமே
இதேபோல் டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனத்தில் மொத்த ஊழியர்களில் 5 – 10 சதவீத ஊழியர்கள் மட்டுமே தற்போது அலுவலகம் வந்து கொண்டு இருக்கும் வேளையில், கொரோனா தொற்று அதிகரிப்பால் மீண்டும் அவர்களுக்கான தளர்வுகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்சிஎல்
டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து ஹெச்சிஎல், ஊழியர்கள் மற்றும் அவர்களது உடல் நலமும், பாதுகாப்பு தான் நிர்வாகத்தின் முக்கிய இலக்காகக் கொண்டு உள்ளது. இதேவேளையில் வர்த்தகம் எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பதாக ஹெச்சிஎல் தெரிவித்துள்ளது.
Work From Home: Infosys, TCS, HCL took important decision on WFH after Covid cases cross 1.1 lakh
Work From Home: Infosys, TCS, HCL took an important decision on WFH after Covid cases cross 1.1 lakh Work From Home தொடரும்.. டிசிஎஸ், இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு..!