புதுடெல்லி: நுபுர் சர்மா சர்ச்சை கருத்து தெரிவித்தது குறித்து சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில், “நாட்டில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவின் முகம் மட்டுமல்ல, அவரது உடலும் மன்னிப்பு கோர வேண்டும். அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்த தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, உ.பி. காவல் துறை இயக்குநர் டி.எஸ்.சவுகானுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “நுபுர் சர்மா பற்றி அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் தெரிவித்த கருத்து மிகவும் கீழ்த்தரமானது. இரு மதத்தினருக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைப்பதாகவும் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. எனவே, அகிலேஷ் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.