இந்தியாவில் விரைவில் தனது விமான சேவையை தொடங்க இருக்கும் ஆகாசா ஏர் விமான நிறுவனம், தங்களுடைய பணியாளர்களுக்கான சீருடையை வெளியிட்டுள்ளது.
இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த சீருடை மிகவும் தரமானதாகவும், ஸ்டைலிஷாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆண் மற்றும் பெண் பணியாளர்களுக்கு தனித்தனியாக சீருடையை ஆகாசா ஏர் விமான நிறுவனம் வடிவமைத்துள்ளது.
விமான கட்டணம் பரவால்லையே.. மும்பைக்குள் சவாரி செய்ய ரூ.3000 கட்டணமா.. வெளுத்து வாங்கும் நெட்டிசன்ஸ்
ஆகாசா ஏர்
இந்தியாவின் புதிய ஸ்டார்ட் அப் விமான நிறுவனமான ஆகாசா ஏர் விமானம் விரைவில் தனது சேவையை ஆரம்பிக்க உள்ளது. சமீபத்தில் முதல் போயிங் விமானத்தை டெலிவரி பெற்ற இந்நிறுவனம் இன்னும் ஒரு சில நாட்களில் பயணிகள் விமான சேவையை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீருடை
இந்த நிலையில் ஏற்கனவே விமான பைலட்டுகள் உள்பட பல்வேறு பணிகளுக்கு வேலைக்கு ஆள் எடுத்துள்ள ஆகாசா ஏர் நிறுவனம் தற்போது தங்களது பணியாளர்களுக்கான சீருடை எப்படி இருக்கும் என்ற ஃபர்ஸ்ட்லுக் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது.
ஸ்டைலிஷ் வடிவமைப்பு
இந்த புகைப்படத்தில் வெளியிட்டுள்ள சீருடை மிகவும் இளமையாகவும். ஸ்டைலிஷாகவும் தற்கால இளைஞர்களுக்கான வடிவமைப்பு கொண்டதாக இருப்பதாகவும், இந்த சீருடை அன்பான, நட்பான மற்றும் மகிழ்ச்சியான எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
பிளாஸ்டிக் கழிவு
இந்த சீருடை மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால் உருவாக்கப்பட்டது என்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பாலிஸ்டர் துணி என்றாலும் இந்த சீருடை அணிவதற்கு மிகவும் இதமாகவும் நீடித்து உழைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ராஜேஷ் பிரதாப் சிங்
இந்த சீருடையை ராஜேஷ் பிரதாப் சிங் என்ற தேசிய அளவிலான பிரபல டிசைனர் வடிவமைத்துள்ளார். அவர் இந்த சீருடை குறித்து கூறியபோது, ‘இந்த சீருடை மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கின் சரியான கலவை ஆகும் என்றும் விமான நிறுவனத்தின் எண்ணங்களை இந்த சீருடை பிரதிபலிக்கின்றது என்றும் மிகவும் தனித்துவமான நீடித்து உழைக்கக் கூடிய தரமான துணிகளில் இந்த சீருடை வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த சீருடையை டிசைன் செய்ய வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.
தீபிகா மெஹ்ரா
விமானத்தில் நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்தாலும் அவற்றை சமாளிக்கும் வகையில் தரமான துணிகளை இந்த சீருடை சிறப்பான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சீருடை மற்றும் காலணி ஆகியவை மிகுந்த தரத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச பேஷன்
குதிகால் முதல் முழங்கால் வரை கூடுதல் குஷன் இந்த சீருடையில் உள்ளதால் இந்த சீருடைய அணிந்து கொண்டு நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தாலும் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்று இந்த சீருடையை வடிவமைத்தவர்களில் ஒருவரான தீபிகா கூறியுள்ளார். சர்வதேச பேஷன் சீருடைகளுக்கு இணையாக இந்த சீருடை அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
First look of Akasa Air crew uniform dresses!
First look of its Akasa Air crew uniform | இனிமேல் யூனிபார்மில் தான் வரணும்: பிரபல விமான நிறுவனத்தின் அறிவிப்பு!