ரயில் பயணம் என்பது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத பயண போக்குவரத்துகளில் ஒன்றாகி விட்டது. நீண்ட தூரம் செல்ல அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக சாமானிய மக்கள் மத்தியில் மிகவும் விருப்பமான போக்குவரத்தாகவும் உள்ளது.
இதற்கு முக்கிய காரணம் கட்டணம் குறைவு. பாதுகாப்பான பயணம் என பல காரணங்களை சொல்லலாம். குறிப்பாக மற்ற போக்குவரத்து கட்டணங்களோடு ஒப்பிடும்போது ரயில் கட்டணம் மிக குறைவாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக பலரின் வாழ்விலும் மறக்க முடியாத அனுபவமாக ரயில் பயணங்கள் சில இருக்கலாம்.
காசை கரியாக்கும் ஸ்விக்கி, சோமேட்டோ.. கடையில் வாங்குவதை விட 34-40% அதிக விலை..!
நீண்டதூரம் செல்லும் ரயில்
என்றாவது யோசித்தத்து உண்டா? இந்தியாவில் மிக நீண்ட ரயில் போக்குவரத்து எது? இது எத்தனை மாநிலங்களுக்கு உள்ளாக செல்கிறது. இதில் கட்டணம் என்ன? மற்ற கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
4000 கிலோமீட்டர்களுக்கும் மேலாக, 9 மாநிலங்கள் வழியாக பயணிக்கும் ரயில் தான் இந்தியாவின் நீண்டதூரம் செல்லும் ரயிலாக உள்ளது.
எங்கு தொடங்கி எங்கு முடிகிறது?
இந்த நீண்ட ரயில் ஆனது திப்ருகர் முதல் கன்னியாகுமரி வரையில் செல்லும் ஒரு ரயிலாகும். இது இந்தியாவில் மட்டும் அல்ல, உலகிலேயே நீண்ட வழிதடங்களில் ஒன்றாகும்.
வெவ்வெறு கால நிலைகள், நிலப்பரப்பு மற்றும் பல்வேறு மொழிகள், பல்வேறு மக்கள் என பலவற்றை இணைக்கிறது. மொத்தத்தில் இந்த ரயில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தினை ஒன்றினைக்கிறது.
என்ன எக்ஸ்பிரஸ்
தி விவேக் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் மிக நீண்ட ரயில் பாதைகளில் ஒன்றாகும். இது 4273 கிலோமீட்டர் பயணிக்கிறது. சுமார் 80 மணி நேரங்களுக்கு மேலாக செல்லும் இந்த ரயில், சுமார் 55 நிறுத்தங்களில் நின்று செல்கிறது. அசாம் முதல் தமிழகம் வரையில் செல்லும் இந்த ரயில், திரும்பவும் அதே பாதையில் பயணிக்க ஆரம்பிக்கிறது.
எப்போது தொடக்கம்
இந்த விவேக் எஸ்க்பிரஸ் ரயிலானது கடந்த 2011ம் ஆண்டில் சுவாமி விவேகானந்தர் நினைவாக அவரின் 150வது பிறந்த நாளில் தொடங்கப்பட்டது.. எனினும் கொரோனா காலத்தில் இந்த ரயில் சேவையானது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எந்தெந்த பகுதியில் செல்கிறது?
டின்சுகியா, திமாபூர், குவஹாத்தி, போங்கைகான், அலிபுர்துவார், சிலிகுரி, கிஷங்கஞ்ச், மால்டா, ராம்பூர்ஹாட், பாகூர், துர்காபூர், அசன்சோல், காரக்பூர், பாலாசூர், கட்டாக், புவனேஷ்வர், கோர்தா, பிரம்மாபூர், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், விசாகப்பட்டினம், சமல்கோட், ராஜமுந்திரி, ஏலூர், விஜயவாடா, ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, வேலூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், செங்கனூர், கொல்லம், திருவனந்தபுரம் மற்றும் நாகர்கோவில் போன்ற ஸ்டேஷன்கள் வழியாக வடக்கிலிருந்து தெற்கே செல்கிறது.
ரஷ்யாவின் ரயில் பாதை
இந்த ரயில் போன்றே ரஷ்யாவில் ஆறு நாட்கள் பயணம் செய்யும் நீண்ட ரயில் பாதை உள்ளது. இதன் மூலம் மாஸ்கோவில் பயணத்தை தொடங்கி, ஆறு நாட்கள் மற்றும் சுமார் 9250 கிலோ மீட்டார்கள் பிறகு விளாடிவோஸ்டோக்கை சென்றடைகிறது. இந்தியாவின் நீண்டதூரம் செல்லும் பாதையுடன் ஒப்பிடும்போது இது இருமடங்கு அதிகம்.
மிகப்பெரிய நெட்வொர்க்
இந்திய ரயில்வேயானது 168 வருட வரலாற்றினையும், 1, 26,611 கிலோ மீட்டற்ற் நீளமுள்ள தடங்களையும் கொண்ட, உலகின் மிகப்பெரிய நெட்வொர்கினை கொண்ட ரயில் நிலையமாக இந்தியன் ரயில்வே உள்ளது. இது 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட்டுள்ளது. 2020 – 21ல் இருந்து இந்தியன் ரயில்வே தினமும் 3.43 மில்லியன் பயணிகளை ஏற்றி செல்கிறது.
எவ்வளவு கட்டணம் தெரியுமா?
இன்றைய நிலவரப்படி, சாதரணமாக எந்த சலுகையும் சேர்க்கப்படாமல் 2A- second AC பிரிவில் ஜிஎஸ்டி, பதிவு கட்டணம் என எல்லாம் சேர்த்து, ஜெனரல் கோச்சில் சுமார் 4400 ரூபாய் ஆகும். இதே தட்கலில் பதிவு செய்யும்போது 4925 ரூபாயாகும்.
இதே 3A- second AC பிரிவில் ஜிஎஸ்டி, பதிவு கட்டணம் என எல்லாம் சேர்த்து, ஜெனரல் கோச்சில் சுமார் 3390 ரூபாய் ஆகும்.
இதே நார்மல் ஸ்லீப்பர் கட்டணம் 1355 ரூபாயாகும். 2S செகண்ட் சீட்டர் – சுமார் 745 ரூபாயாகும்.
India’s longest train route that covers over 4000 kms: Do you know how much the fee is?
India’s longest train route that covers over 4000 kms: Do you know how much the fee is?/இந்தியாவின் மிக நீண்ட ரயில் எது தெரியுமா.. எவ்வளவு கட்டணம்?