புதுடெல்லி: இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து விரிவாக பார்ப்போம். இதற்கு அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட சில எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013 வாக்கில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இப்போது இந்த நிறுவனம் ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
கடந்த வாரம் இந்த போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி போனின் அப்டேட்டட் வெர்ஷனாக இந்த போன் வெளிவந்துள்ளது. போக்கோ F4 5ஜி, iQoo நியோ 6 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 30 போன்ற போன்களுக்கு விற்பனையில் கடுமையான போட்டியை கொடுக்கும் என தெரிகிறது.
சிறப்பு அம்சங்கள்
- மீடியாடெக் டைமன்சிட்டி 1300 SoC சிப்செட் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போன் இதன் முந்தைய மாடலை காட்டிலும் பல்வேறு டாஸ்குகளை மேற்கொள்ள சுலபமாக உதவுவதாகவும் ரிவ்யூவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 90hz ரெப்ரெஷ் ரேட், 6.43 இன்ச் ஃபுள் ஹெச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த போன்.
- ஆக்சிஜன் 12.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 12-இல் இயங்குகிறது.
- இந்த போனின் பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் பிரதான கேமரா 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது. 32 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இதில் இடம்பெற்றுள்ளது.
- 5ஜி இணைப்பு, டைப் சி யுஎஸ்பி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன். இதன் எடை 190 கிராம் என தெரிகிறது. இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.
- 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 4,500mAh டியூயல் செல் பேட்டரியை கொண்டுள்ளது இந்த போன்.
- இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது. அதில் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட போன் 28,999 ரூபாய்க்கும், 12ஜிபி ரேம் + 256 இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட போன் 33,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- வரும் 11-ஆம் தேதி வரையில் அறிமுக சலுகையும் இதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
We’d like to think that this is popular opinion. #OnePlusNord2T 5G, available now: https://t.co/dw6TTf2i1D pic.twitter.com/899ZOiWjzV
— OnePlus India (@OnePlus_IN) July 5, 2022