இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில், இலங்கை மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, தொடரையும் இழந்தது.
பல்லேகேலேவில் இலங்கை-இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
இலங்கை அணியின் தொடக்க வீராங்கனைகளான ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்னே இருவரும் ரேணுகா சிங் பந்துவீச்சில் அடுத்தடுத்து போல்டாகி வெளியேறினர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் அதப்பத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் மாதவி ஓட்டங்கள் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அனுஷ்கா சஞ்சீவனி, கேப்டன் அதப்பத்துவுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அணியின் ஸ்கோர் 42 ஆக உயர்ந்தபோது அதப்பத்து 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் 25 ஓட்டங்களில் இருந்த அனுஷ்கா ரன்அவுட் ஆனார்.
PC: Twitter (@WomensCricZone)
ஓரளவுக்கு ஸ்கோரை உயர்த்திய நிலக்ஷி டி சில்வா 32 ஓட்டங்கள் எடுத்தார். ஏனைய வீராங்கனைகள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கடைசி வரை களத்தில் நின்ற அம காஞ்சனா 83 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்தார்.
𝗜𝗻𝗻𝗶𝗻𝗴𝘀 𝗕𝗿𝗲𝗮𝗸!
Renuka Singh stars with the ball as #TeamIndia bowl out Sri Lanka for 173. #SLvIND
We will be back for India’s chase shortly. 👍 👍
Scorecard 👉 https://t.co/XOkhAjAZvT pic.twitter.com/Ek6LaGA1zj
— BCCI Women (@BCCIWomen) July 4, 2022
இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளையும், மேக்னா சிங் மற்றும் தீப்தி சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் அதிரடியில் மிரட்டினர். பந்துகளை பவுண்டர்களுக்கு அனுப்பிய ஸ்மிரிதி மந்தனா அரைசதம் கடந்தார். அவரைப் போலவே நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்திய ஷாபாலி வெர்மாவும் அரைசதம் அடித்தார்.
இலங்கை பந்துவீச்சாளர்களினால் கடைசி வரை இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. இந்திய அணி 25.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 174 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஸ்மிரிதி மந்தனா 83 பந்துகளில் ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 94 ஓட்டங்களும், ஷாபாலி வெர்மா 71 பந்துகளில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 71 ஓட்டங்களும் விளாசினர்.
PC: Twitter (@WomensCricZone)
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்டார் ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி ஜூலை 7ஆம் திகதி நடக்க உள்ளது.
India won the 2nd ODI by 10 wickets and take an unassailable 2-0 lead in the ODI series.#SLvIND #SLWomen pic.twitter.com/ng6cLp6gQ1
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) July 4, 2022