இந்து கடவுளின் படங்கள் பொறிக்கப்பட்ட காகிதத்தின்மீது மாமிசம் பார்சல் செய்து கொடுத்த இஸ்லாமியர் கைது!

லக்னோ; இந்து கடவுள் படங்கள் பொறிக்கப்பட்ட காகிதத்தின்மீது மாமிசம் பார்சல் செய்து கொடுத்த இஸ்லாமியர், அங்கு ஆய்வு செய்ய சென்ற காவலரை தாக்க முயன்றதாக கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி. மாநிலத்தில் கோழி இறைச்சி கடை நடத்தி வரும் இஸ்லாமியர் ஒருவர், இறைச்சி வாங்க வருபவர்கள், இந்துக்கடவுள் படங்கள் பொறிக்கப் பட்ட காகிதங்களில் கோழி இறைச்சியை பார்சல் செய்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிலர் கொடுத்த புகாரின் பேரில், அந்த நபரை உ.பி. மாநில காவல்துறை கைது செய்துள்ளது.

மதரீதியிலான சர்ச்சைக்கு பெயர்போன மாநிலம் உத்தரபிரதேசம். அங்குள்ள சம்பால் பகுதியில், கோழி இறைச்சி கடை நடத்தி வந்த இஸ்லாமியர்  தாலிப் ஹுசைன், கோழி இறைச்சி பார்சல் செய்துகொடுக்க, இந்து படங்கள் பொறிக்கப்பட்ட பேப்பரை பயன்படுத்தி வந்தாக கூறப்படுகிறது.

ஹுசைன் மத உணர்வுகளை தூண்டும் விதமாக, இது இந்து தெய்வங்களின் படங்கள் அடங்கிய காகிதத்தில் கோழி இறைச்சியை கொடுத்து வந்தாக புகார்கள் எழுந்தன.  இதையடுத்து அந்த கடைக்கு சென்ற காவல்துறையினர், அவரது கடையில் சோதனை நடத்தச்சென்றபோது, அவர்களிடம் ஹுசைன் கத்தியை காட்டி  மிரட்டி தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தாலிப் ஹுசைனை காவல்துறையினர், அங்கிருந்த இந்து கடவுள் படங்கள் பொறிக்கப்பட்ட பேப்பர்களை கைப்பற்றினர். தாடர்ந்து, அவரை கைது செய்து எஃப்ஐஆர் பதிவு செய்தனர். அவர்மீது,   IPC பிரிவுகள் 153-A [மதம், இனம், பிறந்த இடம், இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்], 295-A [வேண்டு மென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள், எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும் அவமதிப்பதன் மூலம் சீற்றம் செய்யும் நோக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் மதம் அல்லது மத நம்பிக்கைகள்] மற்றும் 307 [கொலை முயற்சி] வழககும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.