இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பூனை மறைந்திருக்கிறது. அந்த பூனையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால். நெடிசன்கள் பலரும் பூனையைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? ட்ரை பண்ணி பாருங்க.
சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல் போல தாக்கி வருகிறது. மறைந்திருக்கும் யானையைக் கண்டுபிடியுங்கள், குதிரையைக் கண்டுபிடியுங்கள், பறவையைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்து பகிரப்படும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள சுவாரசியமான புதிர் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது.
அந்த வகையில், இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு அழகான புல்வெளி, சக்கர வண்டி, கொட்டகை, வேலி மற்றும் ஒரு அழகான லவுஞ்ச் பகுதியுடன் ஒரு கொல்லைப்புறம் உள்ளது. ஆனால், இந்த படத்தில் ஒரு ஒரு பூனை என்கேயோ கொல்லைப்புறத்தில் மறைந்திருக்கிறது. அந்த பூனை எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் அனைவருக்குமான சவால். நெட்டிசன்கள் பலரும் மறைந்திருக்கும் பூனையை வெறித்தனமாக தேடி வருகிறார்கள்.
இந்த படத்தில் இருக்கிற பூனையின் பெயர் ரிக்கி. இந்த பூனை இங்கிலாந்தின் பிராட்ஃபோர்டில் இருக்கிறது. பூனையைக் கண்டுபிடிக்க நெட்டிசன்கள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். சில ட்விட்டர் பயனர்கள் பூனையை சரியாக கண்டுபிடித்தனர். ஆனால், பலரும் பூனையைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. கண்டுபிடிக்க முடியாமல் தங்கள் முயற்சியைக் கைவிட்டனர்.
பூனை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள் ஒரு குறிப்பு தருகிறோம். பூனை முழுமையாக தெரியாது. இப்போதும், உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இதோ விடையைத் தருகிறோம்.
பூனை ரிக்கியின் உரிமையாளர் லீ ஓமன் கூறுகையில், சக்கர வண்டிக்கும் கொட்டகைக்கும் இடையே பூனை மறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். “எனது துணைவர் மற்றும் மகளுக்கு ரிக்கியைக் கண்டுபிடிங்க என்று சவால் விட படம் எடுத்தேன். ஆனால், அந்த நேரத்தில் ட்விட்டர் கணக்கைப் பற்றி எதுவும் தெரியாது. எனது துணைவர் அதைப் பற்றி பின்னர் என்னிடம் கூறினார். இப்போது அந்த படத்தை வெளியிட்டு ரிக்கியைக் கண்டுபிடிக்க அனைவருக்கும் சவால் விட்டுள்ளேன்” லீ ஓமன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“