கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், பந்தல் அமைப்பதற்காக எடுத்து செல்லப்பட்ட கம்பு, இருசக்கர வாகனம் மீது தட்டியதில் நிலை தடுமாறி பைக்குடன் கீழே விழுந்த இருவர் மீது கார் மோதிய விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது.
பட்டகசாலியின்விளை என்ற பகுதியில் சுடலை மாடசுவாமி கோவில் திருவிழாவிற்காக பந்தல் அமைக்க இருவர் தோளில் வைத்து கம்பு எடுத்து சென்றபோது இந்த விபத்து நேர்ந்தது.
பைக்கில் சென்ற இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் எதிரே வந்த கார் மோதி இருவரும் இழுத்துச் செல்லப்பட்டனர். இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.