உலகின் வாழத்தகுந்த சிறந்த நகரங்களில் சென்னைக்கு எந்த இடம் தெரியுமா.. பெங்களூரை விட பெட்டர்.. ஏன்?

உலகின் வாழத்தகுந்த சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்கள் இடம் பெற்றுள்ளது.

எனினும் இந்த நகரங்கள் எந்தெந்த இடங்களை பெற்றுள்ளன. இது எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

எக்னாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) உலகின் மக்கள் வாழத்தகுந்த சிறந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கோயம்புத்தூர்-க்கு வரும் டெக் மஹிந்திரா.. தமிழ்நாட்டு ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!

என்னென்ன காரணிகள்?

என்னென்ன காரணிகள்?

இந்த பட்டியலின் படி, 2022ம் ஆண்டிற்காக வாழத்தகுந்த குறியீடு முந்தைய ஆண்டிற்கான உலகளாவிய வாழ்வதாரக் குறியீடு முந்தைய ஆண்டிற்காக குறியீட்டில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகள், பொது போக்குவரத்து, சர்வதேச இணைப்புகள், டெலி கம்யூனிகேஷன், தண்ணீர், தரம் வாய்ந்த வீடுகள், பசுமை திறந்த வெளி, அரசியல் ஸ்திரத்தன்மை, குற்ற விகிதங்கள், சுகாதாரம் என பலவற்றையும் அடிப்படையாக கொண்டது.

மோசமான இடத்தில் பெங்களூரு

மோசமான இடத்தில் பெங்களூரு

கடந்த ஆண்டு மத்திய அரசின் வாழ்க்கை வசதிக் குறியீட்டில் பெங்களூரு முதலிடத்தில் இருந்தது. ஆனால் ஜூன் 24 அன்று வெளியிடப்பட்ட எக்னாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் இன்டெக்ஸ் 2022ல், கர்நாடாகாவின் தலைநகரம் இந்திய நகரங்களில் மோசமாக இருந்தது.

பெங்களூரு-வின் நிலை
 

பெங்களூரு-வின் நிலை

இந்த எக்னாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் இன்டெக்ஸ் 2022ல் ஐந்து இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் டெல்லி மற்றும் மும்பை, பெங்களூரு, அகமதாபாத், சென்னை உள்ளிட்ட நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் முந்தைய ஆண்டில் டெல்லி மற்றும் மும்பை மட்டுமே இடம் பெற்றுள்ளது. 2022ல் இது விரிவடைந்துள்ளது.

டெல்லி & மும்பை

டெல்லி & மும்பை

எனினும் இந்த ஐந்து நகரங்களுமே 140 – 146க்கும் இடையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ஐடி நகரமான பெங்களூரு 54.4 மதிப்பெண்ணுடம் 146-வது இடம் பெற்றுள்ளது.

தேசிய தலை நகரான டெல்லி, நிதி தலை நகரமான மும்பை ஆகியவை முறையே 140 (56.5 மதிப்பேண்) மற்றும் 141 (மதிப்பெண் 56.2) ஆகிய இடங்ளில் உள்ளன.

சென்னை & அகமதாபாத் நிலவரம்

சென்னை & அகமதாபாத் நிலவரம்

சென்னை மற்றும் அகமதாபாத் 55.8 மற்றும் 55.7 மதிப்பெண்களுடன் முறையே 142 மற்றும் 143வது இடங்களை பெற்றுள்ளன.

ஐடி நகரமான பெங்களூருவில் பல அண்டை நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் உள்ள பெரும் நகரமாகும். ஸ்டார்ட் அப்களுக்கு ஏற்ற விருப்பமான நகரமாகவும் உள்ளது. இது இந்தியாவில் இடம் பெற்றுள்ள நகரங்களில் கடைசி இடத்தில் உள்ளது.

ஏன் பெங்களூருக்கு இந்த நிலை?

ஏன் பெங்களூருக்கு இந்த நிலை?

சாலைகளின் தரம், பொதுபோக்குவரத்து, சர்வதேச இணைப்புகள், எனர்ஜி வழங்கல், தொலைத் தொடர்பு, தண்ணீர் மற்றும் நல்ல வீடு என பலவும் EIU அடிப்படையாக கொண்டது. தோட்டங்களுக்கு பெயர் பெற்ற பெங்களூரு, சமீப ஆண்டுகளில் அதன் உள்கட்டமைப்புகளுக்கு மத்தியில் கடுமையான பிளவைச் சந்தித்து வருகின்றது. போக்குவரத்து நெரிசல்களும் அதிகரித்து வருகின்றது.

வாழத்தகுதியற்ற நகரம்

வாழத்தகுதியற்ற நகரம்

வாழ தகுதியற்ற 5 நகரங்களின் பட்டியலில் பாகிஸ்தானின் கராச்சி இடம் பெற்றுள்ளது. இதோடு நைஜீரியாவில் லாகோஸ் இடம் பெற்றுள்ளது.

EIU அதன் வருடாந்திர வாழ்வாதாரக் குறியீட்டுக்கு பின்வரும் ஐந்து காரணிகளைக் கருத்தில் கொள்கிறது.

நிலைத்தன்மை (25%), கலாச்சாரம் மற்றும் சுற்றுசூழல் (25%), சுகாதாரம் (20%), உள்கட்டமைப்பு (20%) மற்றும் கல்வி (10%) உள்ளிட்டவற்றையும் கருத்தில் கொள்கின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Global livability index 2022: Do you know where Chennai ranks among the world’s most livable cities?

Global livability index 2022: Do you know where Chennai ranks among the world’s most livable cities?/உலகின் வாழத்தகுந்த சிறந்த நகரங்களில் சென்னைக்கு எந்த இடம் தெரியுமா.. பெங்களூரை விட பெட்டர்.. ஏன்?

Story first published: Tuesday, July 5, 2022, 18:48 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.