கர்நாடக: ஊழல் வழக்கை விசாரித்தற்காக பணிமாறுதல் கிடைத்தாலும் கவலையில்லை என கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சந்தேஷ் கூறியுள்ளார். அரசு அதிகாரிகளுக்கு எதிரான கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு விசாரணையின் போது நீதிபதி சந்தேஷ் பேட்டியளித்துள்ளார். அதிகாரிகளுக்கு எதிராக கருத்து கூறியதால் எனக்கு பணிமாறுதல் தண்டனையாக கிடைக்கும் என நீதிபதி என்னிடம் கூறினார்கள். எந்த அச்சுறுத்தலுக்கும் அடிப்பணிய மாட்டேன், அரசியல் சாசனத்தை பாதுகாப்பதே என் கடமை என நீதிபதி சந்தேஷ் தெரிவித்துள்ளார்.