எரிவாயு வரத் தாமதமாகும்! லிட்ரோவின் புதிய அறிவிப்பு


நாட்டிற்கு கிடைக்கவிருந்த எரிவாயு வருவதற்கு மேலும் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.  

சீரற்ற காலநிலை காரணமாக எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைய தாமதமாகும் என  அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

இதன்போது, நாட்டிற்கு  3,724 மெட்ரிக் தொன் எரிவாயு  கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜூலை 9ஆம் திகதி நாட்டை வந்தடையும் எரிவாயு

எரிவாயு வரத் தாமதமாகும்! லிட்ரோவின்  புதிய அறிவிப்பு | Litro Announcement Regarding Gas Distribution

ஜூலை 6 முதல் 8 ஆம் திகதிக்குள் கப்பல் நாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் எதிர்பாராத வானிலை காரணமாக, கப்பல் ஜூலை 9 ஆம் திகதியே இங்கு வரவுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் உலக வங்கிக்கு இடையில் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த எரிவாயு கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.