உலகளாவிய தரகு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஜெஃப்ரிஸ், பிஎஸ்இ 500 நிறுவனங்களின் செலவுப் போக்குகள் பற்றி ஆய்வு செய்துள்ளது.
2022ம் நிதியாண்டில் ஊழியர்களின் செலவுகள் ஆண்டுக்கு ஆண்டு 14% அதிகரித்து, 10 டிரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஜூலை 1 முதல்.. 3 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. உஷாரா இருங்க!
கடந்த நிதியாண்டில் சம்பள விகிதம் பெரியளவில் ஏற்றம் கண்டுள்ளதை இந்த தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
ஐடி துறையில் 20% வளர்ச்சி
4வது காலாண்டில் பணியாளர்களின் செலவு வளர்ச்சி விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 13% அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐடி துறையில் 20% வளர்ச்சியுடன் முக்கிய மாற்றம் கண்டுள்ளது. வங்கிகள் மற்றும் நுகர்வோர் துறையில் 7 – 8% வளர்ச்சியும் உள்ளது. இதில் கவனிக்கத்தக்க நல்ல விஷயம் என்னவெனில் இந்த காலகட்டத்தில் எந்த துறையிலும் சரிவினைக் காணவில்லை என்பது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
மொத்த ஊழியர்கள்
சுமார் 100 நிறுவனங்களின் வருடாந்திர அறிக்கைகள் படி, 12% மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. இதே சம்பள அதிகரிப்பு அளவானது நிறுவனங்களின் வளர்ச்சியினை பொறுத்து இருக்கலாம். இது சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்கள் என பேதமின்றி காணப்படுகின்றது.
டெக் துறையில் பிரம்மாண்ட வளர்ச்சி
டெக் துறையில் தொடர்ந்து வலுவான பணியமர்த்தல் விகிதமானது இருந்து வருகின்றது. குறிப்பாக கடந்த நிதியாண்டில் ஐடி துறையில் பணியமர்த்தல் விகிதமானது வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஸ்டார்ட் அப்களுடன் வளர்ச்சி இருந்தது. எனினும் நடப்பு ஆண்டில் ஸ்டார்ட்அப்களில் வளர்ச்சி விகிதமானது இன்னும் வலுவாக இருந்து வருகின்றது. எனினும் அமெரிக்காவின் வளர்ச்சியினை அதிகம் சார்ந்துள்ளது.
பணியமர்த்தல் அதிகரிக்கும்
நடப்பு ஆண்டில் ஐடி துறையில் 10% வளர்ச்சி காணலாம் என நிபுணர்கள் கூறி வரும் நிலையில், பணியமர்த்தலும் வலுவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்ப்புற வேலைவாய்ப்பு குறித்த அரசின் காலாண்டு அறிக்கையின் படி, மார்ச் 2022ல் வேலையின்மை விகிதம் 9 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.2% சரிவினைக் கண்டுள்ளது. இது கொரோனாவின் வருகைக்கு பிறகு மேம்பட்டு வருகின்றது.
வலுவான வளர்ச்சி
இதே நவுக்ரி அறிக்கையின் படி கடந்த ஏப்ரல் & மே மாதங்களிலும் வளர்ச்சியானது, கடந்த ஆண்டினை காட்டிலும் 40% வளர்ச்சி கண்டுள்ளது. இதே இபிஎஃப்ஓ தரவும் மீண்டும் வலுவாக உள்ளதையே காட்டுகின்றது. இது பணியமர்த்தல் அதிகரித்து வருவதையே சுட்டிக் காட்டுகின்றது.
எனினும் கிராமப்புறங்களில் சம்பளம் தொடர்ந்து பின்னடைவில் இருப்பதையே காணமுடிகிறது. தற்போது இது பணவீக்கத்திற்கும் கீழாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
TCS, Infosys, HCL, Wipro May hire more Employees in 2022; IT sector Hiring likely to be strong
Hiring in the IT sector is likely to be strong this year as well/ஐடி ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. பல லட்சம் பேருக்கு காத்திருக்கும் வாய்ப்பு!