இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி சாலையோர வீட்டிற்குள் புகுந்தது.
இந்த கோர விபத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூன்று பேர் உயிரிழந்தனர். முன்னதாக, நேற்று குலு பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 பள்ளி மாணவர்கள் உள்பட 16 பேர் உயிரிழந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் 3,000 பேர் உயிரிழப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது