கனடாவிலும் எதிரொலித்த ‘காளி’ சர்ச்சை

இந்து கடவுளை அவமதித்ததாக கூறப்படும் காளி ஆவணப்படத்தை திரும்ப பெற வேண்டும் என்று கனடா இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

கனடா நாட்டின் டெரோண்டோவில் உள்ள `ஆகா கான்’ அருங்காட்சியகத்தில் பன்முக கலாசாரத்தை கொண்டாடும் வகையில் `ரிதம்ஸ் ஆஃப் கனடா’ என்ற திருவிழா நடைபெற்றது. இதில், இயக்குநர் லீனா மணிமேகலையின் காளி என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதன் போஸ்டர் இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது.

image

இந்நிலையில், இந்து மத தலைவர்களிடம் இருந்து புகார்கள் வந்ததாக கூறி, காளி படத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கனடாவுக்கான இந்திய தூதரகம் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த திரைப்படம் சம்பந்தப்பட்ட அனைத்தையுநம் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்வதாக அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்றைய தினம் இவ்விவகாரம் சர்ச்சையானபோது, லீனா மணிமேகலை `எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்” என்று ட்வீட் செய்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.