கன்னியாகுமாரியில் பைக் மீது கம்பு தட்டியதால் தடுமாறி கீழே விழுந்த இருவர் மீது கார் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
கன்னியாகுமாரி மாவட்டம் பட்டகசாலியின்விளை என்ற பகுதியில் சுடலை மாடசுவாமி கோவில் திருவிழாவிற்காக பந்தக்கால் அமைப்பதற்கு இருவர், தோளில் வைத்து கம்பு ஒன்று எடுத்து சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது அந்த வழியாக வந்த பைக் மீது கம்பு தட்டியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவர் மீது கார் மோதியது. இந்த விபத்தில் இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.