என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் என்று பெருமையுடன் கூறினாலும் இந்தியாவில் இன்னும் 50 சதவீத மக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை என்று UNICEF ஆய்வறிக்கை கூறுகிறது, இதேபோல் கிராமங்களில் மக்கள் குடிநீருக்காக இன்றும் நீண்ட தூரம் சென்று பெற வேண்டிய நிலை நாட்டில் பல பகுதிகளில் உள்ளது.
அதேபோல் இந்திய கிராமப்புறத்தில் 85 சதவீத குடிநீர் விநியோகம் நிலத்தடி நீரை நம்பி தான் உள்ளது, இதேவேளையில் நிலத்தடி நீர் அளவும் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் பெங்களூர் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் முயற்சி மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
200 பேரை பணிநீக்கம் செய்த Udaan.. ஸ்டார்ட்அப் ஊழியர்கள் கண்ணீர்..!
தண்ணீர் தட்டுப்பாடு
கல்லூரி நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் 2 மாதங்களுக்கு ஒரு பக்கெட் தண்ணீர் தான் கிடைக்கும், இது பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் ஸ்வப்னில் ஸ்ரீவஸ்தவ் மற்றும் அவரது நண்பர் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து Uravu Labs என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்க அடிப்படை காரணமாக இருந்துள்ளது.
Uravu Labs
காற்றில் இருந்து தண்ணீர் உருவாக்குவது என்பது புதியது அல்ல ஆனால் இதைச் செய்ய அதிகப்படியான மின்சாரம் தேவை, அதைக் கிரீன் எனர்ஜி மூலம் தயாரிப்பது இல்லை. ஆனால் Uravu Labs மாற்று எரிசக்தி கட்டமைப்பில் இயங்கும் முறையைக் கண்டறிந்துள்ளது.
சோலார் எனர்ஜி
அதாவது desiccant தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் காற்றில் இருந்து தண்ணீரை ஈர்க்கும் பணியைச் சோலார் எனர்ஜி மற்றும் தொழிற்துறையில் உருவாக்கப்பட்டும் வேஸ்ட் ஹீட் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தி இக்கட்டமைப்பை இயக்குகிறது.
வெறும் 6 ரூபாய்
தற்போது இருக்கும் கட்டமைப்பில் ஒரு லிட்டர் தண்ணீர் வேண்டும் என்றால் 4 யூனிட் மின்சாரம் தேவை, இதன் விலை ஒரு யூனிட்-க்கு 8 முதல் 10 வரையில் ஆகும். ஆனால் Uravu Labs கட்டமைப்பு மூலம் தற்போது ஒரு நாளுக்கு 20 முதல் 100 லிட்டர் குடிநீர் தயாரிக்கப்படுகிறது, ஒரு லிட்டருக்கு 6 ரூபாய் வரையில் வரியில் செலவாகிறது.
விரைவில்
இதை மேம்படுத்தும் பட்சத்தில் ஒரு லிட்டர் 4 ரூபாய்க்கும், தொழிற்துறை கட்டமைப்பில் மேம்படுத்துவது மூலம் ஒரு லிட்டர் 2 – 2.5 ரூபாய் வரையிலான விலையில் தயாரிக்க முடியும் என Uravu Labs என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனர்களான கோவிந்த பாலாஜி (பொறியியல்), ஸ்வப்னில் ஸ்ரீவஸ்தவ் (வணிகம்), பர்தீப் கர்க் (தொழில்நுட்பம் மற்றும் வணிகம்) மற்றும் வெங்கடேஷ்.ஆர் (வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள்) ஆகியோர் கூறுகின்றனர்.
1.3 டிரில்லியன் டாலர் சந்தை
Uravu Labs தயாரிக்கும் குடிநீரை தற்போது குளிர்பான நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் உலகளவில் காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் துறை 1.3 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தையாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என Uravu Labs நிறுவனர்கள் கூறுகின்றனர்.
Bangalore based Startup Uravu Labs creates water from air, sells at ₹4 per liter
Bangalore based Startup Uravu Labs creates water from air, sells at ₹4 per liter காற்றில் இருந்து தண்ணீர்.. லிட்டர் வெறும் 4 ரூபாய் தான்.. அசத்தும் பெங்களூர் ஸ்டார்ட்அப்..!