அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழுவில் இடம் பெற்றுள்ள 10க்கும் மேற்பட்டோர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட முடிவுகள் நீதிமன்றம் கட்டுப்படுத்துவது முறையல்ல எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பொது குழுவில் கட்சி உறுப்பினர்களின்விருப்பப்படி ஜனநாயகம் முறைப்படி எடுக்கும் முடிவுகள் நீதிமன்றம் கட்டுப்படுத்தக்கூடாது என உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விரைந்து விசாரிக்க கோரி முறையீடப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி அனுமதியுடன் நாளை மறுநாள் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
அதிமுக பொதுகுழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நாளை மூன்றாவது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.
“பொதுச்செயலாளர் தேர்தல்” உள்ளிட்ட அதிமுகவின் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் என்னென்ன? வெளியான பரபரப்பு தகவல்.!#AIADMK #opannerselvam #EdappadiPalaniswami #OPS #EPS #PoliticsLive #Chennai #TamilNadu #TamilNews #Seithipunalhttps://t.co/q1Ikas3NjH
— Seithi Punal (@seithipunal) July 5, 2022