தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றமின்றி சர்வதேச சந்தையில் வர்த்தகமாகி வருகின்றது.
முதலீட்டாளார்கள் பணவீக்கம் குறித்தான தரவு, வட்டி விகிதம் குறித்த எதிர்பார்ப்பு, மத்திய வங்கிகளின் முக்கிய நடவடிக்கைகள் என பலவும் தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலையானது இன்று பெரியளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது. தொடர்ந்து சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரண தங்கம் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
துள்ளி குதிக்கும் தங்கம் விலை.. சாமானிய மக்கள் கவலை.. இனி என்னவாகும்?
பத்திர சந்தை Vs தங்கம்
அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடந்து ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது. இதற்கிடையில் வட்டியில்லா முதலீடான தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. இது பணவீக்கம் மத்தியில், பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதன் காரணமாக தங்கம் விலையானது 1808 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது.
முதலீடுகள் வெளியேற்றம்
அமெரிக்காவின் மத்திய வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்க திட்டமிடுகின்றன. ஆக இதன் காரணமாக தங்கத்தில் முதலீடுகள் குறையலாம். அதோடு இந்தியாவிலும் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவும் தேவையினை குறைக்கலாம். ஆக இதுவும் அழுத்தத்தினை கொடுத்துள்ளது. இதற்கிடையில் தான் தங்கம் இடிஎஃப்களில் இருந்தும் முதலீடுகள் வெளியேற ஆரம்பித்துள்ளன.
கொரோனா அச்சம்
சீனாவில் மீண்டும் கொரோனாவின் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது இந்தியாவிலும் சமீபத்திய நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இது மேற்கொண்டு தேவையினை குறைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
எனினும் இந்த வட்டி அதிகரிப்பே பொருளதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனினும் அமெரிக்க மத்திய வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கிகள் என்ன முடிவு எடுக்கப் போகின்றனவோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாய் மதிப்பு Vs தங்கம்
டாலர், பத்திர சந்தை என்பது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தினாலும், இந்திய ரூபாயின் மதிப்பானது தங்கத்திற்கு எதிராகவே உள்ளது. ஆக இது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். இவற்றோடு வரவிருக்கும் நாட்களில் வரவுள்ள அமெரிக்காவின் பண்னை அல்லாத பே ரோல் தரவும் ஃபெடரல் வங்கி கூட்டம் என பலவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
சர்வதேச சந்தை நிலவரம்?
தங்கம் விலையியானது தற்போது சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 10.35 டாலர்கள் அதிகரித்து, 1811.85 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதனை போலவே, வெள்ளி விலையும் 2.01% அதிகரித்து, 20.073 டாலராக காணப்படுகின்றது. இதே இந்திய கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு, 100 ரூபாய் அதிகரித்து, 52,225 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளியின் விலை கிலோவுக்கு 452 ரூபாய் அதிகரித்து, 58,940 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது விலை இன்னும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்திருந்தாலும், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்று குறைந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 4805 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, 38,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து, 5242 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 41,936 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,420 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 70 பைசா அதிகரித்து, 64.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 647 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 700 ரூபாய் அதிகரித்து, 64,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.48,050
மும்பை – ரூ.48100
டெல்லி – ரூ.48100
பெங்களூர் – 48,130
கோயமுத்தூர், மதுரை, என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.48,050
gold prices today: inflationary, worries, slowdown concerns to support yellow metal
gold prices today: inflationary, worries, slowdown concerns to support yellow metal/சாமானிய மக்கள் இனி வாங்க முடியுமா.. தங்கம் விலை இன்னைக்கு எவ்வளவு தெரியுமா?