சென்னையில் கரோனா சிகிச்சை பெற்று வரும் 5,264 பேரும் நலமுடன் உள்ளனர்: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் கரோனா சிகிச்சை பெற்று வரும் 5,264 பேரும் நலமுடன் உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களாக கோவிட் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி, 5,936 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர். நேற்ற மட்டும் 942 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் 5,264 நபர்கள் வீட்டுத் தனிமையிலும், 57 பேர் மாநகராட்சியின் கோவிட் பாதுகாப்பு மையங்களிலும், 263 நபர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் எந்தவித உயிர்பாதிப்பும் இன்றி நலமுடன் உள்ளதாகவும், மண்டல அலுவலங்களில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையத்திலிருந்து வீட்டுத் தனிமையில் உள்ள 5,264 நபர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாத 8,68,930 நபர்களும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோயுள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 3,76,917 நபர்களும் மாநகராட்சியின் சுகாதார மையங்களில் கோவிட் தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு மாநகராட்ச சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.