சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் பயணிப்போர் முகக்கவசம் அணிந்துருப்பதை நடத்துனர்கள் உறுதி செய்ய வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. பேருந்துகளில் நடத்துனர், ஓட்டுநர் ஆகியோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்தது. திருமண மண்டபம், வழிபாட்டு தலங்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.