சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
சேலம் மாவட்டம் பவளத்தானூர் அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி செந்தில்வேல்(38). இவர் இரும்பாலை அருகே உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு, பின்பு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது கே.ஆர்.தோப்பூர் பகுதியில் பின்னால் வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் ஒன்று இவருடைய இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் செந்தில்வேல் பலத்த காயமடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் செந்தில்வேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தாரமங்கலம் காவல்துறையினர், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.