ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இன்று (05) முற்பகல் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்றார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை, சபாநாயகர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.
தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு முன்மொழியப்பட்ட தீர்வுகள் அடங்கிய வழிகாட்டல்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி அவர்கள் அவையில் பிரவேசித்து உரையை செவிமடுத்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
05.07.2022