இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்வின் 40 ஆண்டுகால சாதனையை ஜஸ்பிரித் பும்ரா முறியடைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்தது.
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் பும்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் அவர் கபில் தேவ்வின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
Photo Credit: Twitter
1981-82ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கபில் தேவ் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆனால் பும்ரா இந்த தொடரில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி, இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதேபோல் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 6வது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
Photo Credit: Twitter(@ICC)