கோவையில் பல்வேறு இடங்களில் திருட்டில் ஈட்டுபட்டு சொந்த ஊரில் சொகுசாக வாழ்த்து வந்த 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டு, செல்போன் பறிப்பு, வழிபறி நடப்பதாக தொடர்ந்து புகார் வந்ததை அடுத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
அப்போது கோவை பூ மார்க்கெட் பேருந்து நிறுத்தம் அருகே 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் ஒரு முதியவரை சூழ்ந்து கொண்டு அவருக்கு தெரியாமல் பணம் மற்றும் செல்போனை திருடினர்.
இதனை பார்த்த போலீசார் மெதுவாக அவர்களது அருகில் சென்று 7 பேர் கொண்ட அந்த கும்பலையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் ஜார்கண்ட்டை சேர்ந்த பகதூர் மகடோ (36), சந்தோஷ் (33), பப்லு மகடோ (23) பீகாரை சேர்ந்த மனிஷ்மகோலி (22), பீகாரை சேர்ந்த 15 சிறுவன், ஜார்கண்ட்டை சேர்ந்த 14 மற்றும் 10 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் 7 பேரும் பீகார், ஜார்கண்ட்டை சேர்ந்தவர்கள், வாரத்தில் ஒரு நாள் கோவை வந்து இங்கு காந்திபுரத்தில் அறை எடுத்து தங்கி,
கடைகளுக்கு செல்லும்போது பொருட்கள் வாங்குவது போல் நடித்து அங்கு எது கிடைத்தாலும் திருடுவதை தொழிலாக கொண்டிருந்திருக்கிறார்கள்.
மேலும் விஷேச நாட்களில் எங்கு கூட்டம் அதிகம் கூடும் என பார்த்து அங்கு சென்று திருடுவது, பின்னர் வாரத்தில் 1, 2 நாட்கள் திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்பட பகுதிகளுக்கும் சென்று கொள்ளை அடித்து வருவதும் தெரியவந்தது.
கோவையில் காலை நேரத்தில் உழவர் சந்தை, பூ மார்க்கெட் ஆகிய இடங்கள், பின்னர் ரயில் நிலையம், காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் ஆகிய இடங்களுக்கு சென்ற கைவரிசை காட்டியதும் விசாரணையில் அம்பலமாகியிருக்கிறது.
திருட்டு வேலைகளை முடித்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் சுழற்சி முறையில் விமானத்தில் சொந்த ஊருக்கு சென்று வந்ததாகவும் பிடிபட்ட கும்பல் கூறியிருக்கிறது. வாக்குமூலத்தை பெற்ற பின்னர் 7 பேரையும் கைது செய்து, 4 பேரை கோவை மத்திய சிறைக்கும் 3 சிறுவர்களை காப்பகத்திற்கும் போலீசார் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM