புதுடில்லி: டில்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
டில்லியில் இருந்து துபாய் கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் எஸ்.ஜி-11 விமானம் தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முடிவுசெய்தனர். அதன்படி கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‛விமானத்தின் இண்டிகேட்டர் விளக்கு செயலிழந்ததால் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது.
விமானம் கராச்சியில் பத்திரமாக தரையிறங்கியது மற்றும் பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். அவசரநிலை எதுவும் அறிவிக்கப்படவில்லை, விமானம் சாதாரணமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்லும் மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்பப்படுகிறது,’ என்றார்.
புதுடில்லி: டில்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.டில்லியில் இருந்து துபாய் கிளம்பிய
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.