ஜேர்மனியை சேர்ந்த என்.ஆர்.ஐ தம்பதி தாக்கப்பட்டதும், அவர்களின் வீடு அடித்து நொறுக்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் அர்ஜுன் சர்மா. இவர் ஜேர்மனியில் வசித்த நிலையில் அந்நாட்டை சேர்ந்த ஜூலி என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது.
இதையடுத்து கடந்தாண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
மகிழ்ச்சியாக இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் ஜெய்ப்பூருக்கு வந்தனர்.
அர்ஜுன் மற்றும் ஜூலி ஆகிய இருவரும் இரண்டு நாய்களை வளர்த்து வந்த நிலையில் அதில் ஒரு நாய் வீட்டு பகுதியில் மலம் கழித்துள்ளது.
#जयपुर
कुत्ता घुमाने को लेकर हुआ हमला
NRI दंपति पर रसूखदारों का हमला !#RajasthanWithNews18 pic.twitter.com/3w0TBfmhzM— News18 Rajasthan (@News18Rajasthan) July 2, 2022
இதை பார்த்து கோபமடைந்த அக்கம்பக்கத்தினர் சிலர் தம்பதியின் வீட்டை ஹாக்கி ஸ்டிக்கால் தாக்கி சேதப்படுத்தினர். மேலும் அவர்களையும் தாக்கினர்.
செல்வாக்கு மிக்க குடும்பத்தினர் அந்த தம்பதியை அடித்து உதைத்தனர்.
பின்னர் என்.ஆர்.ஐ தம்பதியினர் எப்படியோ உயிரை காப்பாற்றிக்கொண்டு வீட்டிற்குள் ஓடினர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் முன்னிலையிலேயே செல்வாக்கு மிக்க குடும்பத்தினர் தம்பதியை மிரட்டியுள்ளனர்.
முதலில் அர்ஜுனை பல மணி நேரம் உட்கார வைத்த பொலிசார், பின்னர் அமைதியை குலைத்த குற்றச்சாட்டில் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் புகாரின் பேரில் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
தற்போது பிரச்சனையில் சிக்கியுள்ள தம்பதிகள் உதவிக்காக அரசாங்கத்திடம் முறையிட்டுள்ளனர்.
இதோடு ஜேர்மனி தூதரகத்தின் உதவியையும் நாடியுள்ளனர்.