காலையில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு பல நன்மைகளை தருகின்றது.
இது தேவையான உடல் வளர்ச்சியை ஏற்படுத்தி, நமது உடலை நாள் முழுவதும் ஆரோக்கியத்துடனும் வைத்திருகிறது.
குறிப்பாக மாலை வேளை உடற்பயிற்சியை விட காலை வேளை உடற்பயிற்சியே சிறந்தது.
அந்தவகையில் காலையில் உடற்பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
- காலை பயிற்சி என்பது உங்கள் ஹார்மோன்களை தூண்டி உங்களை விழிப்பாகவும், புத்துணர்ச்சியுடனும், அலுப்பு மற்றும் தூக்க உணர்ச்சியை போக்கி புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
- காலை பயிற்சி உங்கள் தோலையும், முகத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
- காலையில் செய்யும் உடற்பயிற்சியும் இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.
- காலை உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டால், சீரான உணாவு உட்கொள்ளும் முறை என்பது இதன் மூலம் ஏற்படும் நன்மைகளில் ஒன்று செரிமானம் மற்றும் நல்ல உடல் செயல்பாட்டை ஏற்படுத்துகிறது.
- உடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்துக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது.
- காலை உடற்பயிற்சி, மூளையின் செயல்திறனுக்கு உதவுகிறது. இதனால், மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறன் மேம்படும்.
- காலை உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி ஆகியவற்றால் மூளையில் உள்ள மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களான செரோடோனின், நோர்பினேப்ரைன், எண்டார்ஃபின், டோபமைன் ஆகியவை அதிகரிக்கின்றன. இதனால், நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது.
- காலையில் உடற்பயிற்சி செய்வதால் அமைதி மற்றும் கவன சிதைவு போன்ற பிரச்சனைகள் இருக்காது.