தென்கொரியாவில் 24 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதம் நுகர்வோர் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
ஆசிய நிதி நெருக்கடிக்குப் பிறகு கடந்த மாதம் தென்கொரியாவின் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. நுகர்வோர் விலைக் குறியீடு ஜூன் மாதத்தில் 6.0% உயர்ந்தது.
இது 1998 நவம்பர் மாதத்திற்கு பிறகு மிக ஏற்பட்டுள்ள அதிகப்பட்ச உயர்வாகும். தென்கொரியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர்ந்து நான்காவது மாதமாக குறைந்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் அந்நியச் செலாவணி கையிருப்பு 9.43 பில்லியன் டாலர்கள் குறைந்துள்ளது.