நடப்பாண்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டிருப்பதால் சுமார் 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 4 நாட்களாக பெய்த கனமழையால் சிட்னி நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், பல முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 50 பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற தயாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.