தொழில் தேடி வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு ஓர் அறிவிப்பு


வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு வழங்குவதில் பரிசீலிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு திரும்பி வந்து வேலைக்காக மீண்டும் வெளிநாடு செல்லும் போது செய்யப்படும் பதிவு தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருத்தப்படும் சட்டம் 

தொழில் தேடி வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு ஓர் அறிவிப்பு | Important Notice For Those Intending To Go Abroad

முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டிருந்த போது, சட்டரீதியான முறையில் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ள டொலர்களின் எண்ணிக்கை தொடர்பில் கண்டறியப்படவுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கணிசமான அளவு பணத்தை அனுப்பியுள்ளவர்களுக்கு மாத்திரம் மீண்டும் வெளிநாடு செல்லக்கூடிய வகையில் சட்டம் இயற்றப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாட்டில் வேலைகளுக்காக வெளிநாடு செல்லும் யுவதிகளுக்கு விமான டிக்கெட் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.