நேற்று நள்ளிரவு மஞ்சூரில் இருந்து கெத்தை செல்லும் சாலையின் நடுவே நின்ற காட்டு யானை கூட்டத்தால் அரைமணி நேரம் பேருந்தில் பயணிகள் காத்திருந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மாற்று வழியான மஞ்சூர் – கெத்தை சாலையில் குட்டியுடன் வந்த காட்டு யானைகள் சாலையில் நடுவே நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து சாலையிலேயே சுமார் அரைமணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பேருந்தில் காத்திருந்தனர்.
பின்னர் காட்டுயானை கூட்டம், அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து பேருந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. பலாப்பழம் உள்ளிட்ட பல்வேறு பழங்களின் சீசன் என்பதால் அதை உண்ண காட்டு யானைகள் அடிக்கடி சாலையில் முகாமிட்டு வருகின்றன. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM