சிட்னி: மிக கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வரலாற்றில் இல்லாத இயற்கைப் பேரிடருக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் உள்ளாகியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் தலைநகர் சிட்னியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ந்து வருகிறது. இதனால் நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
வெள்ளப் பெருக்கு காரணமாக சுமார் 50,000 பேர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். சிட்னியின் தென் பகுதியில் உள்ள வாரகம்பா அணை நிரம்பி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இப்பகுதியில் சுமார் 200 மிமீ மழை பதிவாகி இருக்கிறது. இதனால சுற்றுப்புறப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்திலிருந்து தப்பித்த டெய்லர் என்பவர் கூறும்போது, “நாங்கள் இருந்த வீடு அடித்து செல்லப்பட்டுவிட்டது. வழக்கத்துக்கு மாறாக நீரின் வேகம் இருந்தது. நான் பார்த்த பயங்கரமான வெள்ளம் இது” என்று தெரிவித்தார்.
மற்றொரு சிட்னிவாசி ஒருவர் கூறும்போது, “மழை மிக வேகமாக பெய்தது. உங்களால் எதையும் நகர்த்தவும் முடியாது, செல்லவும் முடியாது” என்றார்.
இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் நிர்வாக தலைவர் டோமினிக் கூறும்போது, “நீங்கள் எங்கிருந்தாலும் கவனமாக இருங்கள். வாகனம் ஓட்டும்போது கவனமாக ஓட்டுங்கள். திடீர் வெள்ளத்திற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
கனமழை, வெள்ளம் காரணமாக சுமார் 20,000-க்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.